வீட்டு மனைப்பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம்
நாமக்கல், மே 21- ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். தினக்கூலிகளாக பணியாற்றும் ஏழை, எளிய விவசாயத் தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் புதனன்று, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் கிராம நிர் வாக அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தின் மாவட்ட துணைத்தலைவர் கோவிந் தசாமி தலைமை வகித்தார். சண்முகம், சித்ரா, முருகன், பெரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சி.துரைசாமி கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். 200க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மாலை வரை போராட்டத்தைத் தொடர்ந் தனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட துணை வட்டாட்சியர் செல்வராஜ், வரு வாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி, குமா ரபாளையம் காவல் ஆய்வாளர் தவ மணி ஆகியோர் போராட்டக்காரர்க ளுடன் பேச்சுவார்த்தை மேற் கொண்டு, கோரிக்கைகள் குறித்து கேட் டறிந்தனர். அதில், 43 தொழிலாளர்க ளுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்குவது, குமாரபாளையம் கிராமப் புற வட்டார பகுதியில் நத்தம் தரிசு நிலம், கல்லாங்குத்து ஆகிய நிலங் களை அளந்து தகுதியானவர்களுக்கு நில அளவை செய்து ஜூன் மாதத்திற் குள் பட்டா வழங்கப்படும், என அதிகாரி கள் உறுதியளித்தனர். அதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.