வங்கதேசத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் லண்டன் எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 8 மணியளவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.