திங்கள், மார்ச் 1, 2021

world

img

துருக்கி: கப்பல் கவிழ்ந்து விபத்து-2 பேர் பலி

துருக்கி: கப்பல் கவிழ்ந்து விபத்து-2 பேர் பலி
துருக்கி கருங்கடல் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
துருக்கியின் கருங்கடல் மாகாணமான பார்ட்டின் கடற்கரையில் ரஷிய நாட்டுக் கொடியுடன் 13 பேர் கொண்ட குழுவினருடன் சரக்குக் கப்பல் ஞாயிறன்று வந்துகொண்டிருந்தது. இந்த கப்பல் ஜார்ஜியாவிலிருந்து பல்கேரியா செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 
மேலும், துருக்கிய கடலோர காவல்படை தனது இணையதளத்தில் 12 ஊழியர்களைக் கொண்டிருப்பதாகவும், கப்பலில் பலாவ் கொடியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹூரியட் தினசரி அந்தக் குழுவில் இரண்டு ரஷியர்களும் 10 உக்ரேனியர்களும் இருந்ததாக அறிவித்தனர். துருக்கிய போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் ஒரு டிவிட்டரில், அர்வின் என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக இரண்டாக உடைந்து மிதந்ததாகக் அறிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக துருக்கிய கடற்படை போர்க் கப்பல் ஒன்றை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

;