- எரிசக்தி வணிகத்தில் ரஷ்யா நம்பகத்தன்மையற்ற தேசம் என ஜெர்மனியின் ஜனாதிபதி ஷோல்ஸ் குற்றச்சாட்டு! ரஷ்யா புள்ளிவிவரங்களுடன் மறுப்பு. ரஷ்யாவை சிதைக்க ஜெர்மனி அனைத்து தடைகளையும் போடுமாம்!
- ஆனால் ரஷ்யா வழக்கம் போல எரிசக்தி தர வேண்டுமாம்!
- என்னே ஐரோப்பாவின் நீதி! உக்ரைன் கோதுமையை கப்பல்கள் மூலம் கொண்டு வர துர்க்கியே - ஐ.நா. முன்முயற்சியில் ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்பந்தம் செய்தன.
- உக்ரைன் ஒடேசா துறைமுகத்தில் கோதுமை கப்பல்களிடையே அமெரிக்கா தந்த ஆயுத கப்பலையும் நிறுத்தியிருந்தது. இந்த கப்பலை ரஷ்யா தாக்கியது.
- உடனே கோதுமை கப்பல்களை ரஷ்யா தாக்கியதாக அமெரிக்கா கூப்பாடு போட்டு கோதுமை போக்குவரத்துக்கு மாற்று திட்டம் போடுகின்றனர்.
- தான் இல்லாமல் உருவாகும் எந்த ஒப்பந்தத்தையும் சீர்குலைக்கும் பணி அமெரிக்காவுக்கு கை வந்த கலை! கிழக்கு உக்ரைன் மக்கள் ரஷ்ய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர்.
- இந்நிலையில் ரஷ்யாவின் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது சிறை தண்டனை கிடைக்கும் கிரிமினல் குற்றமாக உக்ரைன் சட்டம் இயற்றி உள்ளது. அனைத்து நேட்டோ உறுப்பினர்களும் போர் விமானங்களை உக்ரைனுக்கு தர வேண்டும் எனவும் அதற்கு ஈடாக புதிய விமானங்களை அமெரிக்கா தரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
- ஸ்லோவேகியா எனும் தேசம் முதலில் மாற்று விமானங்களை தந்தால் மட்டுமே தனது விமானங்களை உக்ரைனுக்கு தர இயலும் என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வாக்குறுதி மீது அவ்வளவு நம்பிக்கை!
- உக்ரைன் மீது பிரசுரங்களை ரஷ்ய ராணுவம் வீசி வருகிறது. அதில் உக்ரைன் தோற்று வருவதாகவும் சரண் அடையும்படியும் கூறப்பட்டுள்ளது.
- உக்ரைனுக்கு அமெரிக்கா தருகிற அதிநவீன ஆயுத உதவிகளின் பின்னணியில் இது ரஷ்யாவுக்கு பலன் தருமா எனத் தெரியவில்லை.
- உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உளவுத்துறை/ பாதுகாப்பு கவுன்சில் முதன்மை அதிகாரி போன்ற பல உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து வருகிறார். இது அமெரிக்காவின் அறிவுறுத்தல் என கூறப்படுகிறது.
- போரை நடத்துவது உக்ரைனா? அமெரிக்காவா? எனும் கேள்வியை பலர் எழுப்புகின்றனர்.