world

img

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள குரெரோவின் அகாபுல்கோவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:47 மணிக்கு ஏற்பட்டது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு நகரம் மற்றும் முக்கிய துறைமுகமான அகபுல்கோவின் வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி உள்ளது.  இப்பகுதி மெக்ஸிகோ நகரத்திற்கு தெற்கே 240 கிலோமீட்டர் (150 மைல்) தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் நிலநடுக்கம் காரணமாக  அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம்  அடைந்துள்ளனர்.