world

img

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு விளாடிமிர் புதின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதிர் ஞாயிறன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 100 நாட்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா படைகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், கடந்த சில தினங்களாக உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சில மேற்கத்திய நாடுகள் கொடுத்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஞாயிறன்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதில், உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், நாங்கள் அதற்கான சரியான முடிவை எடுக்க நேரிடும். எங்களது ஆயுதங்களை அவர்களின் நாடுகள் மீது உபயோகிக்க வேண்டி வரும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக பெரும்பாலான நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், போரை தீவிரமாக்கும் முடிவாக உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகிறது. இதற்கிடையே ரஷ்யா அதிபரின் இந்த எச்சரிக்கை உலக நாடுகளிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.