மாஸ்கோ, நவ. 20 - ஆயிரம் நாட்களைக் கடந்து நீடிக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் இப்போது மிகவும் ஆபத்தான புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் சமீபத்திய முடிவால் உலகளாவிய பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய நகர்வு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் படைகளுக்கு நீண்டதூர (ATACMS) ஏவுகணைகளையும் கண்ணிவெடிகளையும் வழங்கவும், அதைப் பயன்படுத்தி ரஷ்யாவைத் தாக்கவும் அனுமதியளித்துள்ளார். இந்த ஆயுதங்கள் ரஷ்ய இலக்குகளை துல்லி யமாகத் தாக்கும் திறன் கொண்டவை. உக்ரைன் படைகள் உடனடியாக இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. செவ்வாயன்று தொலைதூரம் தாக்கும் 6 ஏவுகணைகளை (ATACMS) ரஷ்யா நோக்கி ஏவியதில், ரஷ்யாவின் அதிநவீன ‘S-400’ வான்பாதுகாப்பு அமைப்பு ஐந்து ஏவுகணைகளை வெற்றிகரமாக வீழ்த்தியது. ஒரு ஏவுகணை பகுதியளவு மட்டுமே வீழ்த்தப்பட்டது. அதன் பாகங்கள் விழுந்த இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
ரஷ்யாவின் எதிர்வினை
இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்வினையாற்றியுள்ள ரஷ்யா, தனது அணு ஆயுதக் கொள்கையிலேயே முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையொப்பமிட்டுள்ள புதிய கொள்கை யில், “ரஷ்யா அல்லது அதன் கூட்டணி நாடுகளின் மீது அணு ஆயுதம் இல்லாத ஒரு நாடு அதன் கூட்டணி நாடுகளின் உதவியுடன் அல்லது அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டின் உதவியுடன் பாலிஸ்டிக் உள்ளிட்ட அதிநவீன ஏவு கணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துமானால் அந்நாட்டின் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன் படுத்தி தாக்குதல் நடத்தலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்யா நேரடியாக அணு ஆயுதப் போருக்கு தயாராகி விட்டதாக மேற்குலக நாடுகளின் ஊடகங்களில் ரஷ்யா மீது பழிசுமத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “அமெரிக்காவுக்கு உக்ரைன் மீதோ அந்நாட்டு மக்கள் மீதோ எந்த இரக்கமும் இல்லை. கடைசி உக்ரைனி யர் வரை பயன்படுத்தி ரஷ்யாவை தாக்க நினைக்கிறார்கள். இது பொறுப்பற்றது; ஆபத்தானது. ரஷ்யா போர் நிறுத்தத்தையும் அமைதியையுமே விரும்புகிறது. இதனை பல முறை ரஷ்யா தெரிவித்து விட்டது. போர் நிறுத்தத்திற்கான நிபந்த னைகளையும் நாங்கள் ஏற்கெனவே கொடுத்துள்ளோம். அதனடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். அமெரிக்காவில் தற்போது தேர் வாகியுள்ள ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடனும் நங்கள் பேச்சு வார்தைக்கு தயாராகவே இருக்கிறோம் பால்டிக் கடல் பகுதியில் உள்ள நாடு களுக்கு உக்ரைனில் இருந்துதான் அச்சுறுத்தல் வருகிறது” என்று டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நேரடி தாக்குதலே
“அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்துகிற செயலானது ரஷ்யா விற்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் அதன் செயற்கைக்கோள்களின் நேரடி ஈடுபாட்டையே குறிக்கும். அமெரிக் காவின் இத்தகைய செயலுக்கு ரஷ்யா வின் பதில் தெளிவாக இருக்கும்” என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு துருக்கி ஆதரவு
குறிப்பிடத்தக்க முறையில், நேட்டோ கூட்டணியின் முக்கிய உறுப்பி னரான துருக்கி, இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. துருக்கி ஜனாதிபதி எர்டோகன், “ரஷ்யாவின் புதிய அணு ஆயுதக் கொள்கை குறித்து மேற்குலக நாடுகள் கவனமாக சிந்திக்க வேண்டும். வெளி அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ரஷ்யா எடுத்துள்ள இந்த முடிவை புரிந்து கொள்ள வேண்டும்” என வலி யுறுத்தியுள்ளார்.
தூதரகங்கள் மூடல்
நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடு கள் உக்ரைனிலுள்ள தங்கள் தூதரகங்க ளை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனிடையே, புதிய அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு நெருங்கும் நிலையில், வெளியேறப் போகும் பைடனின் பொறுப்பற்ற முடிவால், மோதல் மேலும் விரிவடையும் அபாயம் உள்ளதாக பன்னாட்டு நிபுணர்கள் எச் சரிக்கின்றனர். இருப்பினும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைத் தணிக்க வாய்ப்புகள் உள்ளன என நம்பப்படுகிறது.