பிரேசிலியா, மே 16 - தொடர்ச்சியான மழை, வெள்ளம் காரணமாக பிரேசிலில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன 124 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
வெள்ளச் சேதத்தின் காரணமாக 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடு கள் வெள்ளத்தில் அழிந்துள் ளன என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். கூடுதலாக தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை நெருக்கடியால் ரியோ கிராண்டே டோ மாநி லத்தில் 21 லட்சம் மக்கள் நேரடியாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்கள் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட அத்தி யாவசிய தேவைகளை அந்நாட்டு அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதை பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரேசிலின் வரலாறு காணாத மழைப்பொழிவு க்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் உருவான வெப்பம் (எல் நினோ) தான் காரணம் என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.