world

img

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் புதிதாக 25,403 பேருக்கு கொரோனா பதிப்பு - 261 பேர் பலி

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,403 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 25,403 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 261 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,86,813 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 85,582 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,54,868 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 33,46,363 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது.