world

img

அழிவின் பிடியில் ரஃபா

ரஃபா, மே 12 - காசாவின் ரஃபா நகரில்  துவங்கிய தரைவழி தாக்குதலை களை இஸ்ரேல் ஒவ்வொரு நாளும்  தீவிரப்படுத்தி வருகிறது. அங்கி ருந்து லட்சக்கணக்கான மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. 

பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர் துவங்கியதி லிருந்து, வடக்கு காசா பகுதியில் இருந்து வலுக்கட்டாயமான முறை யில்  தெற்கு நோக்கி இஸ்ரேல் ராணு வம் பாலஸ்தீனர்களை விரட்டியது.  இதனால் 14 லட்சம் பாலஸ்தீனர் கள் ரஃபா எனும் சின்னஞ்சிறிய நக ருக்குள்  தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்கள் வெளியேற வேறு வழியோ இடமோ இல்லாத சூழ்நி லையில், அங்கிருந்தும் வெளியேறு மாறு இஸ்ரேல் அவர்களை மிரட்டு வது ஏற்க முடியாதது என ஐ.நா  அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஜபாலியா அகதிகள் முகாமில் தாக்குதல் 
பாலஸ்தீனர்கள் அதிகளவு அடைக்கலம் புகுந்துள்ள வடக்கு  காசா பகுதியில் உள்ள ஜபாலியா  அகதிகள் முகாமில் இஸ்ரேல் விமா னங்கள் நேரடியாக குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளன என பாலஸ்தீன செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஒரே நேரத்தில் பல மீட்டர் சுற்றளவு பரந்த அளவில் கடுமை யான பாதிப்புகளை உருவாக்கி பல ரைக் கொல்லும் வகையிலனான கார்பெட் குண்டுகளை வீசி தாக்கு தல் நடத்தியுள்ளது. பீரங்கிகள் மூலம் தரை வழித்தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.  இந்த தாக்குதலில் ஆம்புலன்ஸ்கள் மீதும் குண்டு வீசப்பட்டுள்ளது.தாக்குதலில் உயி ரிழந்தவர்களின் சரியான எண்ணி க்கை உடனடியாகத் தெரிவிக்கப்பட வில்லை. 

‘வடக்கு காசாவில் ஹமாஸ் குழு வை அழித்து விட்டோம். தற்போது ரஃபா பகுதியில் உள்ள ஹமாஸ் குழுவை அழிக்கப்போகிறோம்’ என  ரஃபா பகுதியில் தாக்குதலை துவங்கிய இஸ்ரேல் ஏன் வடக்கு பகுதியில் தாக்குதலை நடத்து கிறது; இது அப்பட்டமான இனப்படு கொலை என இஸ்ரேலுக்கு கடும் கண்டங்கள் எழுந்து வருகின்றன.

மருத்துவமனைகள் முழுவதும் அழிப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் களால் வடக்கு காசா பகுதியில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் தற்போது அழிந்து போயுள்ளன. அது மட்டுமின்றி  காசா  முழுவதும்  உள்ள மருத்துவ மனைகளில் எரிபொருள் தீர்ந்து விடும் அபாயம் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 5 முதல் காசா பகுதிக்குள் எந்த நிவாரண வாகனத்தையும் இஸ்ரேல் ராணுவம் நுழைய விடவில்லை. இதனால் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது.

ஜபாலியா முகாமில் நடத்தப் பட்ட தாக்குதலுக்கு பிறகு அங்கி ருந்த மருத்துவமனையில் எரி பொருள் பற்றாக்குறை காரண மாக வெளிச்சம் இல்லை; இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்  படுத்தி வருவதால் அப்பகுதியில் மருத்துவ உதவிகள்  எதுவும்  கிடைக்கவில்லை. நோயாளி களுக்கு கொடுக்க ஆக்ஸிஜன் கூட இல்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மக்களை வெளியேற்றுவது சகிக்க முடியாதது 
இந்நிலையில் பாலஸ்தீனர்களை பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு துரத்துவது  சகிக்க முடியாதது என  ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட ஆலோசகரான ஜோசப் பொரெல் விமர்சித்துள்ளார். மேலும் தெற்கு காசா நகரான ரஃபா  மீது தரைவழித் தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் மீண்டும் இஸ்ரேலை வலி யுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல் “ஏற்கனவே மோசமாக உள்ள மனி தாபிமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கும்” என்று தெரிவித்துள் ளார். 

ரஃபாவில் உணவுப் பொருட்கள் இல்லை 
இஸ்ரேல் ராணுவம்  ஐநா நிவா ரணப் பொருட்களைத் தடுத்து நிறுத்தி ரஃபா பகுதியில் தாக்குதலை துவங்கிய பிறகு காசா முழு வதுமே உணவுப் பொருட்கள்  குறைந்து வருகிறது என ஐ.நா தெரிவித்துள்ளது.  காசாவில் உள்ள ஐ.நா மனிதாபிமான அமைப்பின்   தலைவரான ஜார்ஜியோஸ் பெட்ரோபெலோஸ்  ஒருவாரத்திற்குள் தற்போது இருக்கும் உணவுகள் தீர்ந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்  மீண்டும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உள்ளார். ஹமாஸ் போர்  நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக இருந்தாலும் இஸ்ரேல் ஒத்துழைக்க மறுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   

பாலஸ்தீன அகதிகள்   அமைப்பு பாலஸ்தீனியர்களை  ரஃபாவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவது “மனிதாபிமான மற்றது” என எக்ஸ் தளத்தில் தெரி வித்துள்ளது.

தோண்டத் தோண்ட பிணங்கள் 
இந்த தாக்குதல்களுக்கு இடையே காசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக இருந்த அல்-ஷிஃபா மருத்துவ மனை வளாகத்தில் மூன்று இடங் களில் 80 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காசா சுகா தார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;