பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது சட்ட விரோதமானது என்றும், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு அமைப்புக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வந்தபோது அவர் கைது செய்தனர். இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், காவல் தலைமையகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் இம்ரான் கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இம்ரான் கானை 8 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை அடுத்து, கைது நடவடிக்கையை எதிர்த்து இம்ரான் கான் தரப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், இம்ரான் கானின் கைது சட்ட விரோதமானது என்றும், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஊழல் தடுப்பு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.