பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து கைபர் பகதுன்வா மாகாணத்தில் உள்ள மர்தான் என்ற இடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.