காத்மாண்டு, நவ.4- நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா வின் பல்வேறு பகுதிகளில், இந்தியா வை ஒட்டிய பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேபாளத்தின் வட மேற்குப்பகுதியிலுள்ள ஜாஜர்கோட் மாவட்டத்திலுள்ள லமிதண்டா பகுதி யை மையமாகக் கொண்டு, பூமிக்கு கீழே சுமார் 10 கி.மீ. ஆழத்தில் வெள்ளி யன்று இரவு 11.32 மணியளவில் பயங் கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பகுதியில் உருவாகி இருந்ததால், லமிதண்டா நக ரமே குலுங்கியது. ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். இதில், சனிக்கிழமை காலை 7 மணி வரை பலியானோரின் எண்ணிக்கை 72 ஆக இருந்த நிலையில், 10 மணிக் குள் இந்த எண்ணிக்கை 157 ஆக அதிகரித்தது. 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி யிருக்கலாம் என்பதால் பலி எண் ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படு கிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ராணுவ ஹெலி காப்டர் மூலம் பார்வையிட்டார். அத னைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை யிலும் ஈடுபட்டார். கடந்த 30 நாட்க ளில் நேபாளத்தில் மட்டும் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், இந்தியாவிலும் பல இடங்க ளில் உணரப்பட்டது. தில்லி, உத்தர கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் மாநி லங்களிலும், சீன எல்லைகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்தியா துணை நிற்கும்
நேபாள நிலநடுக்கத்தில் பலியா னோருக்கு இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி இரங்கல் தெரிவித்துள் ளார். “நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடை கிறேன். நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது, நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணை நிற்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குண மடைய வேண்டுகிறோம்’ என்று டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள் ளார்.