போதைப் பொருட்கள் கடத்தலில் தொடர்புடையவர்களை சிங்கப்பூர் அரசு தூக்கிலிட்டு வருகிறது. ஆனால், அவசர கதியில் இந்த தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக கைதிகளின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால், இவ்வளவு நாட்களாகத் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததற்கு கொரோனா பெருந்தொற்றுதான் காரணம் என்றும், தற்போது தொற்று இல்லாததால் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றும் நிர்வாகத்தரப்பில் கூறப்படுகிறது.