world

img

கஜகஸ்தானில் மீண்டும் அஸ்தானா

கஜகிஸ்தானின் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ் பல்வேறு புதிய சட்டங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். 
முன்னாள் ஜனாதிபதியின் பெயரை நினைவுபடுத்தும் வகையில் நாட்டின் தலைநகருக்கு நூர் சுல்தான் என்ற பெயரை  மார்ச் 2019ல் சூட்டினார்கள். இதை மீண்டும் அஸ்தானா என்று மாற்றுவோம் என்று டோகாவேய் உறுதிமொழி அளித்திருந்தார். அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும் வகையில் மீண்டும் அஸ்தானா என்ற பெயரை சூட்டுவதற்கான சட்டத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.
அதோடு, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து, ஏழு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது. ஒரு முறை ஜனாதிபதியாக இருந்தவர், மீண்டும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஜனாதிபதியாவது தடுக்கப்படுகிறது. இவற்றிற்கான சட்டங்களும் இயற்றப்பட்டு ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்டுள்ளன.
கஜகிஸ்தான் நாடாளுமன்றமும் இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.