டாக்கா,ஆக.27- நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலை மையிலான வங்கதேச இடைக்கால அரசு வங்க தேச தொழிலாளர் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஷீத் கான் மேனனை கைது செய்துள்ளது.
மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட ஒரு மர ணத்திற்கு குற்றம் சாட்டப்பட்டு இடதுசாரி தலைவ ரான ரஷீத் கானை கடந்த வாரம் இடைக்கால அரசு கைது செய்தது. பிறகு 5 நாள் நீதிமன்றக் காவலில் வைத்தது. இதற்கு இடதுசாரிக் கட்சிகளும், அமைப்புகளும் கடுமையான கண்டனங்கள் தெரி வித்துள்ளன. இது அரசியல் பழிவாங்கும் நட வடிக்கை என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அப்துல் வதூத் என்பவர் மரணமடைந்தது தொ டர்பாக கான் மீது ஒருவர் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் கான் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையில் பங்கேற்றிருந்த அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் மீது ஏராள மான வழக்குகளை பதிவு செய்து வருகிறது. வங்க தேச கலவரத்தில் உயிரிழந்த மக்களின் உறவி னர்கள் இவர்கள் மீது தாமாக முன்வந்து புகார் கொடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த புகாரின் பின்னணியில் சதி உள்ளது. இது வங்கதேசத்தை சூறையாடுவதற்காக அவாமி லீக் ஆட்சியின் குறைகளை பயன்படுத்திக் கொண்ட ஏகாதிபத்திய சக்திகள் இடதுசாரிகளின் குரலை நசுக்கும் செயல் என கண்டனங்கள் எழுந்துள்ளன.
கடந்த கால ஆட்சியில் ரஷீத் கான் சிவில் விமான போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அதே போல கடந்த தேர்தலில் அவாமி லீக் உட னான கூட்டணியில் இருந்த 14 கட்சிகளில் ஒரு கட்சி யாக தொழிலாளர் கட்சியும் பங்கேற்றுள்ளது. மேலும் சமூக நல அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
சீர்திருத்தக் கோரிக்கைகளை ஆதரித்தவர்
ரஷீத் கான் மாணவர்களின் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான போராட்டத்தின் போது அவர்க ளின் சீர்திருத்த கோரிக்கைகளை ஆதரித்தார். மேலும் போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் கண்டித்ததுடன், கலவரத்தில் உயிரிழந்த மாண வர்களுக்கு நீதி கேட்டு வந்தார். ரஷீத் கான் மாண வர்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு தொழி லாளர் கட்சியின் அலுவலங்கள் மீது தாக்குதல் நடத் தப்பட்டது. அநீதிக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக ரஷீத் கான் துன்புறுத்தப்பட்டு வருகிறார். 81 வய தான அவரது உடல்நிலை மோசமாக இருக்கிறது. “அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் அவரை கொன்று விடக் கூடாது” என வங்கதேச தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் உடனடி யாக எந்த நிபந்தனையும் இன்றி அவரை விடு தலை செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
சத்ரா மைத்ரி என்ற வங்க மாணவர் அமைப்பும் ரஷீத் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள் ளது. அவருக்கு எதிரான வழக்குகள் பொய்யான வை என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் அவரை உடனடியாக விடுவிக்கக் வேண் டும் எனவும் கூறியுள்ளது.