world

img

உலக செய்திகள்

ஜெர்மனி விவசாயிகள் போராட்டம் 
ஜெர்மனி அரசா ங்கம் விவசா யிகளுக்கு வழங்கி வந்த மானியங்களைக் குறைக் கும் திட்டத்தை அறிவித்தது. விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சில வெட்டுகளை மட்டும் திரும்ப பெற்றுக்கொண்டது. இதனை கண்டித்து அனைத்து மானியங்களையும் முறையாக வழங்க வேண்டும் என நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது டிராக்டர்களுடன் தலைநகர் பெர்லினை நோக்கி சென்று தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர். 

மேற்கு நாடுகளுக்கு இந்தோனேசியா கண்டனம் 
காசா மீதான மேற்கு நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டை இந் தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரெட்னோ மர்சுடி கண்டித்துள்ளார். பாலஸ்தீன நிலைப்பாட்டில் குறிப்பாக வடக்கில் உள்ள நாடுகளில் இருந்துஇரட்டை நிலைப்பாடு வருகிறது. இந்நாடுகள் மனிதாபிமான மீறல்க ளைப் பார்த்துக் கொண்டு திடீரென்று அமைதியாகிவிட்டன. மனித உரிமைகள் பற்றி அவர்கள் அடிக்கடி வழங்கும் விளக் கங்கள் இப்போது எங்கே போனது என கேள்வி எழுப்பி யுள்ளார்.   

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு 
பாகிஸ்தான் - ஆப் கானிஸ்தான் எல் லையோர மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் போலியோ தடுப்பூசி செலுத் தச் சென்ற மருத்துவக்குழு வுக்கு பாதுகாப்பு அளித்த 6 போலீசார் வெடிகுண்டு தாக்குத லில் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் படுகாயமடைந் துள்ளனர்.  தற்போது அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.