world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்க  சுகாதாரப் பணியாளர்கள்  போராட்டம் அறிவிப்பு

ஜூன் 8 அன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்க சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகாகோ வில் உள்ள அமெரிக்கன் மெடிக்கல் அசோ சியேஷன் ஹவுஸ் கட்டிடத்திற்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  குறிப் பிட்டுள்ளனர்.பாலஸ்தீனத்திற்கான சுகாதாரப் பணியாளர்கள் ,இனப்படுகொலை க்கு எதிரான மருத்துவர்கள் அமைப்புகளால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் தான்  காலநிலை குழப்பத்தின் காட்பாதர்ஸ்

எண்ணெய் நிறுவனங்கள் தான் காலநிலை குழப்பத்தின் காட்பாதர்கள் என  ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் விமர்சித்துள்ளார். நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற செயல் பாடு தான்   காலநிலை மாற்றத்திற்கு காரணம் எனக் கூறியுள்ளார் . சுகாதாரம், உடல்நலத்தை முன்னிறுத்தி புகையிலை விளம்பரங்கள் தடை செய்யப்பட்டது போலவே  புதைபடிவ எரிபொருட்களுக்கும்  தடை விதிக்க  வேண்டும் எனவும் கடுமையாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - லெபனான்  பதற்றத்தை தணிக்க வேண்டும்

இஸ்ரேலுக்கும்  லெபனானுக்கும்  இடையே எல்லையில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வேண்டும் என ஐநா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அழைப்பு விடுத்துள்ளார். லெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையில்  தொடர்ந்து அதிகரித்து  வரும் பதற்ற நிலைமை குறித்து ஐ.நா கவலை கொண்டுள்ளது. எனவே  ஐ.நா அமைதிக்குழு  படை, முத்தரப்பு சந்திப்பு  முறை  மூலம் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.  

80 புலம் பெயர்ந்தோர் ஆங்கிலக்கால்வாயில் மீட்பு

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 80 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாகத்   தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் ஏற்பட்ட பிரச்சனை யின் காரணமாக சிலர் தண்ணீரில் விழுந்துள்ள னர். அவர்களை பிரிட்டிஷ் கடலோர காவல்படை மற்றும் உயிர்காக்கும் படகுக் குழுக்கள் ஒன்றி ணைத்து மீட்டுள்ளனர். 2024 ஆம்  ஆண்டின்  முதல் நான்கு மாதங்களில் 7,500 க்கும் மேற்பட்டப புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகள் மூலம் பிரிட்டனுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவை தொடர்ந்து  இலங்கையை கைப்பற்றும் எலான் மஸ்க்

எலான் மஸ்க் இன் ஸ்டார் லிங்க்  இணைய சேவைகளை வழங்குவதற்கான ஆரம்ப அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளது. கடந்த மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற  10 ஆவது உலக நீர் மன்ற மாநாட்டின் போது  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை   சந்தித்து இது குறித்து மஸ்க் உரையாடியுள்ளார். இந்தோனேசியா இணைய சந்தையை ஏற்கனவே எலான் மஸ்க் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;