வெள்ளி, பிப்ரவரி 26, 2021

world

img

உக்ரைன்: மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 15 பேர் பலி

உக்ரைன் நாட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் நகரில் மருத்துவமனை ஒன்றில் இரண்டு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை உள்ளே 33 பேர் இருந்தனர் இதில் 15 பேர்  தீயில் சிக்கி பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர் .
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி உத்தரவிட்டு உள்ளார்.

;