world

img

தடைகள் தகர்ந்தன : ஈரானின் ஏற்றுமதி அதிகரிப்பு

போலியான காரணங்களைக் காட்டி, ஈரான் மீது அமெரிக்காவும், மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் போட்டுள்ள தடைகளைத் தாண்டி, ஈரானின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரஷ்யா- உக்ரைன் மோதலால் எண்ணெய் ஏற்றுமதியில் ஈரான் கவனம் செலுத்தி வருகிறது. டாலரை வாங்கிக் கொண்டு எண்ணெய் வழங்குவதோடு, சொந்த நாணயங்களிலும் வியாபாரம் பண்ணுவது பற்றி பல நாடுகளுடன் உடன்பாட்டை ஈரான் எட்டி வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவையும் ஈரான் வலுப்படுத்தியுள்ளது. இந்த நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் விரைவில் அந்தந்த நாடுகளின் நாணயங்களை வைத்து மேற்கொள்ளப்படும் என்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஈரானின் பேரீச்சம்பழத்திற்குப் பல நாடுகளில் கிராக்கி உள்ளன. ஆனால், அமெரிக்கா போட்ட தடைகளால் இதன் ஏற்றுமதி குறைந்தது. தற்போது பல்வேறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளால், பேரீச்சம்பழ ஏற்றுமதி மீண்டும் சூடு பிடித்துள்ளது. 85 நாடுகளுக்கு தற்போது ஈரானின் பேரீச்சம்பழம் அனுப்பப்படுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இது குறித்துக் கருத்து தெரிவித்த ஈரானின் விவசாயக்குழுத் தலைவர் அர்சலபான் காசிமி, "ஈரானின் உள்ள பல்வேறு வகை பேரீச்சம்பழங்கள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் கிடைக்காதவையாகும். எங்கள் நாட்டில் பல்வேறு தட்பவெப்ப நிலைகள் நிலவுவதால்தான் இந்த பல வகையான பேரீச்சம்பழஙகள் கிடைப்பதற்குக் காரணமாகும். உள்நாட்டிலும் ஏராளமாக பேரீச்சம்பழம் நுகர்வு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 

;