world

img

ஈராக்கில் தீ விபத்து - 60க்கும் மேற்பட்டோர் பலி!

இராக்கில் தீ விபத்து;  50 பேர் பரிதாப பலி!

பாக்தாத், ஜூலை 17 -  இராக்கின் வாசித் மாகாணத்தில் உள்ள அல்-குட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது. ஐந்து மாடிக் கட்டட வணிக வளாகத்தில் இரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொருட்கள் வாங்க வந்தவர்களும், உணவருந்த வந்தவர்களும் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் 50 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகின்றன.  தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை இரண்டு நாளில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.