இலங்கையில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் கனமழையால் கம்பா, ரத்னபுரா, கொழும்பு, பட்டாளம், கலுட்ரா உள்ளிட்ட 10 மாவட்டங்கள் பெரும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனால், 800 வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 2.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளர்.