world

img

இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி?

கொழும்பு, ஜூலை 10- மக்கள் விரோத ஆட்சியாளர் களுக்கு எதிராக கொந்தளித்த இலங்கை மக்கள் ஜூலை 9 அன்று ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றி னர். இதனால் பயந்து பதறிய ஜனாதி பதி கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடினார். ஆனாலும் ஆவேசம் அடங்காத மக்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இலங்கை ஜனாதி பதி மாளிகையை தங்களது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள மக்கள், மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்துள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஒவ்வொரு பிரிவாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் ஒவ்வொரு அறையை யும் சுற்றாலத்தலம் போல சுற்றிப் பார்த்து வருகின்றனர். முதன் முறையாக ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவு வாயில் மீது  ஏறிக் குதித்துச் சென்றவர் மலை யகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பில் நடைபெறும் போராட்டங்களை உள்ளூர் பெளத்த பிக்குகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லா மிய மத பெரியவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் சங்க பிரதிநிதி கள் போன்றோரே செல்வாக்குடன் கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படு கிறது. ஜனாதிபதி மாளிகையில் பொருட்களை சேதப்படுத்திய சிலரை கண்டித்ததுடன் பொது சொத்து களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது  என்றும்  போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.  போராட்டக்காரர்கள் பலரும் மாளிகையின் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்வையிட்டனர். ஜனாதிபதி பயன்படுத்தியதாக நம்பப்படும் அறைக்குள் சென்று அங்கிருந்த அலமாரிகளை திறந்தனர். அதனுள் இருந்த கோட் சூட் ஆடைகளை அணிந்து படம் எடுத்துக் கொண்டனர். ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மிகப்பெரிய அறையில் உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. அந்த அறைக்குள் சென்ற சிலர், அங்கிருந்த கருவிகளை இயக்கி உடற்பயிற்சி செய்தனர். மாளிகைக்குள் உள்ள மிகப்பெரிய நீச் சல் குளத்தில் பலர் குளித்துமகிழ்ந்தனர். 

இலங்கைக்கு புதிய சகாப்தம்

ஜனாதிபதி மாளிகைக்குள் கட்டுக் கடங்காமல் பெருங்கூட்டம் வரத் தொடங்கியது. இதையடுத்து போராட் டக்காரர்களை ஒழுங்குபடுத்தும் பணி யை  மாணவர்கள் மற்றும்  சமயத் தலை வர்களின் பிரதிநிதிகள் மேற்கொண்ட னர். மாளிகையின் பிரதான வாயில் பகுதியை மூடினர்.  இலங்கை ஜனாதிபதி மாளிகையின் தெருமுனை வரை கூட வழக்கமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு அந்த பகுதி கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும். ஆனால், இலங்கையில் தீவிரமான மக்கள் போராட்டங்கள் காரணாக சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு அந்த சாலைகள் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பின.

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்  பியோனா சிர்மானா,  “கோத்தபய மற்றும் ரணிலை பதவி யில் இருந்து அகற்றிய பிறகு, இலங்கை க்கு புதிய சகாப்தத்தை உருவாக்கு வதற்கான நேரம் இது. இந்த இரு வரும் முன்பே செல்லவில்லை. அது தான் எனக்கு மிகவும் வருத்தம் தந்தது. அவர்கள் முன்பே சென்றிருந்தால் எந்த அழிவும் ஏற்பட்டிருக்காது,” என்றுகூறினார்.

ஜூலை 13 இல்  ஜனாதிபதி பதவி விலகல் 

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து, ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவேன் என்று கோத்தபய ராஜபக்சே தம்மிடம் தெரிவித்துள்ள தாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரி வித்துள்ளார். மஹிந்த யாப்பா அபேவர்தன  சனிக்கிழமை இரவு தொலைக்காட்சி யில் பேசுகையில், ஜனாதிபதி பதவி யில் இருந்து விலகுமாறு நாடாளு மன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கோத்தபய விடம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப் படுத்தும் விதமாக கோத்தபய ராஜ பக்சே புதன்கிழமை வரை ஜனாதிபதி யாக இருப்பார் என்று  கூறினார். இதைத்தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, விவசா யத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர,  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பந்துலகுணவர்தன ஆகியோர் ராஜினாமா செய்துள்ள னர். அனைத்துக்கட்சிகள் இணைந்து கூட்டாட்சி அரசை அமைக்க வழிவகுக் கும் வகையில் ராஜினாமா செய்ததாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் போராட்டத்தால் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு அனைத்துக்கட்சி ஆட்சி பொறுப்பேற்க வழி வகை செய்யத் தயார் என்று அறிவித்தார்.  மக்கள் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளதால்  அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் ரணில். அதில் எதிர்க்கட்சி தலை வர் சஜித் பிரேமதேசா உள்ளிட்ட சில பிரதான கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. நீடித்து வரும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தபயவும் பிரதமர் ரணிலும் பதவியில் இருந்து விலக  வேண்டும் என்று அவர்கள் கூறினர். இக்கூட்டத்தில் பேசிய ரணில், பிரதமர் பதவியில் இருந்து  விலகத் தாம் தயாராக இருப்பதாகவும் குடிமக்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் களின் இந்த பரிந்துரையை  ஏற்றுக்கொள்வதாகவும்தெரிவித்தார். 

எம்.பி., மீது தாக்குதல்

கொழும்புவில் நடைபெற்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சமகி ஜன பலவேகய  கட்சி எம்.பி., ராஜித சேனாரத்ன, போராட்டக்காரர்கள் சிலரால் திடீரென தாக்கப்பட்டார். அவர் போராட்ட களத்துக்கு வந்த போது, பொதுமக்கள் தண்ணீர் மற்றும் பிற பொருட்களை அவரை நோக்கி வீசினர். போராட்டக் களத்தை விட்டு வெளியேறுமாறும் முழக்கமிட்டனர். 

ராணுவ தளபதி வேண்டுகோள் 

இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், அமைதியை நிலை நிறுத்த மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். அமைதியை நிலை நாட்ட பாதுகாப்பு படையினருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.