world

img

தீக்கதிர் உலகச் செய்திகள்...

அமெரிக்கா நடத்தும் உயிரியல் ஆயுத ஆராய்ச்சி

பெய்ஜிங்: ரஷ்ய-சீன எல்லைக்கு அருகிலுள்ள அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளஆய்வகங்கள் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கிவருவதாக ரஷ்ய பாதுகாப்பு துறை கருதுகிறது என்று ரஷ்ய பாதுகாப்பு துறைச் செயலாளர் பட்ருஷேவ் ஏப்ரல் 8 ஆம் நாள் கூறினார்.இவை சுகாதார மற்றும் தொற்றுநோய் எதிர்ப்புநிலையங்கள் என்று அமெரிக்கா கூறியது. ஆனால், கடந்த பல பத்து ஆண்டுகளில் ராணுவ உயிரியல் ஆயுத ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் கட்டப்பட்ட ஃபோர்ட்டெட்ரிக்கை போலவே இவை உள்ளன. குறிப்பாக,இயல்பற்ற நோய்கள் அருகிலுள்ள பகுதிகளில் தோன்றி வருகின்றன என்று அவர் கூறினார்.

                               *************

அமெரிக்க தடைக்கு சீனா எதிர்ப்பு

பெய்ஜிங்: சீனாவின் 7 சூப்பர் கணினி நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் தடைநடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகம் சீனாவின் 7 சூப்பர் கணினி நிறுவனங்களை “ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில்” சேர்க்க முடிவுசெய்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்து, சீனவெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் பேசுகையில், தொழில்நுட்ப ஏகபோக வர்த்தக தகுநிலையை பேணிக்காத்து, சீன வளர்ச்சியை தடுக்கும் வகையில், சீன உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்கா அடக்கி வருகின்றது. இதற்கு சீனா உறுதியுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்று கூறினார்.

                               *************

சீனத் தேசிய குடிமக்கள் நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு

பெய்ஜிங்:இவ்வாண்டின் மார்ச் திங்கள்சீனத் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடுகடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட 0.4விழுக்காடு அதிகமாகும். இதில், உணவு விலைக் குறியீடு 0.7 விழுக்காடு குறைவாகும். உணவு அல்லாத பொருட்களின் விலைக் குறியீடு 0.7 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஏப்ரல் 9 ஆம் நாள் கூறியது. நுகர்வோர் விலைக் குறியீட்டு அதிகரிப்புக்கு உணவு அல்லாத பொருட்களின் விலை அதிகரிப்பு முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என்று ஆய்வாளர் ஒருவர் கூறினார்.மேலும், கடந்த ஆண்டில் இருந்ததை விட இவ்வாண்டின் மார்ச் திங்கள் தொழில்துறை உற்பத்தியாளர் விலைக் குறியீடு 4.4 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் கூறியது.

                               *************

உலகளவில் முதன்முறையாக  கட்டப்பட்டுள்ள முப்பரிமாண குடியிருப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் முப்பரிமாண தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முதலாவது குடியிருப்புப் பகுதி கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவின் பலரி குழுமம் 5ஏக்கர் நிலப்பரப்பில் 15 வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளில் மொட்டை மாடியும் நீச்சல் குளமும் உள்ளன.திட்டப்படி, 2020ஆம்ஆண்டு செப்டம்பர் திங்களில் கட்டத் தொடங்கப்பட்ட இந்த வீடுகள், 2021ஆம் ஆண்டு வசந்தகாலத்துக்குள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

                               *************

எண்ணெய்க்காகப் போர் தொடுத்தோம் கமலா ஹாரிஸ் ஒப்புதல்

சிகாக்கோ: அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அண்மையில், சிகாக்கோ நகரில் ஜோ பைடன் அரசின் வேலை வாய்ப்பு மற்றும் அடிப்படை வசதி கட்டுமானம் தொடர்பான கொள்கையை பரப்புரை செய்த போது, நீர்வள வசதிகளின் மறுசீரமைப்பு பற்றி உரை நிகழ்த்தினார். அப்போது, தன்னுடைய உரையில் கடந்த சில பத்துஆண்டுகளாக அமெரிக்க அரசு வெளிநாடுகளில்தொடர்ச்சியாக போர் தொடுத்ததற்கான உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டார்.தூதரகக் கொள்கை தொடர்புடைய பல கூட்டங்களில் தான் பங்கெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பல ஆண்டுகளாக பல தலைமுறையினர் எண்ணெயைக் கைப்பற்றும் பொருட்டே போர்களைத் தொடுத்து வந்துள்ளனர் என்றும், விரைவில் நீர்வளத்தைக் கைப்பற்றுவதற்கான போர் உருவாகும் என்றும் குறிப்பிட்டார். ஆனால்,அமெரிக்காவின் முக்கியச் செய்தி ஊடகங்கள் கமலா ஹாரிஸ் தெரிவித்த இந்தத் தகவலில் கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                               *************

எண்முறை நாணயத்தை சோதனை செய்ய ரஷ்யா திட்டம்

மாஸ்கோ: ரஷ்ய நாணயமான ரூஃபிளை2022ஆம் ஆண்டு எண்முறையில் வெளியிட்டுசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஏப்ரல் 8ஆம் நாள் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் முடிவின்படி, ரஷ்யா, எண்முறை நாணயத்திற்கான வளர்ச்சித் திட்டத்தையும் வகுக்கவுள்ளது. இவ்வாண்டின் டிசம்பர் மாதத்துக்குள் எண்முறை நாணயத்தின்  அமைப்புமுறையை உருவாக்கி 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இதற்கான சோதனை தொடங்கும் என்றும் தெரிய வந்துள்ளது. 

;