ஹனோய், செப்.5- கடந்த எட்டு மாதங்களில் ஏற்றுமதி-இறக்குமதியில் சுமார் 400 கோடி அமெரிக்க டாலர் உபரியை எட்டி வியட்நாம் அரசு சாத னை படைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து சோசலிச நாடான வியட்நாம் மீண்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான வளர்ச்சிப் புள்ளிவிபரங்கள் உற்சாகத்தைத் தருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியில் இருந்து மீண்டு, பின்னர் உக்ரைன் நெருக்கடியால் கூடுதல் நெருக்கடியைப் பல்வேறு நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தனது ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் வியட்நாம் வெளிநாட்டு வணிகத்தில் உபரியை எட்டி சாதனை படைத்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களில் 396 கோடி அமெரிக்க டாலரை உபரியாக வியட்நாம் ஈட்டி யுள்ளது. இத்தகவலை வியட்நாமின் பொதுப் புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இவர்கள் தரும் புள்ளிவிபரங்களின்படி, வியட்நாமின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டின் மதிப்பு, கடந்த எட்டு மாதங்களில் 49 ஆயிரத்து 764 கோடி அமெரி க்க டாலராக இருந்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங் களில் இருந்த மதிப்பை விட 15.5 விழுக்காடு அதி கமாக இருக்கிறது. இதில் ஏற்றுமதி 25 ஆயிரத்து 80 கோடி அமெரிக்க டாலரும், இறக்குமதி 24 ஆயிரத்து 684 அமெரிக்க டாலரும் இருந்திருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காதான் வியட்நாமில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்திருக்கிறது. 7 ஆயிரத்து 770 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் வியட் நாமில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி யாகியுள்ளது. வியட்நாமிலிருந்து பொருட் களை வாங்கிக் கொள்வதில் ஐரோப்பிய யூனி யன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனுக்கும், வியட்நாமிற்கும் இடையில் 21 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலர் வர்த்தக உபரியாக வியட்நாம் வசம் இருந்திருக்கிறது. ஏற்றுமதிக்கு சாதகமாக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள்தான் இந்த வளர்ச்சி க்குக் காரணங்களாகும். தங்கள் நாட்டுக்குச் சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகை யிலான தாராள வர்த்தக உடன்பாடுகளில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இது புதிய தலைமுறை தாராள வர்த்தக உடன்பாடுகள் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பாக போடப்பட்ட தாராள வர்த்தக உடன்பாடுகள் வளர்ந்த நாடுகளுக்குப் பலன்களையும், பிற நாடுகளுக்கு சவால்களையுமே அளித்து வந்தது. தங்களுக்குச் சாதகமான அம்சங்கள் இருந்தால் மட்டுமே, தாராள வர்த்தக உடன் பாட்டில் வியட்நாம் கையெழுத்திடுகிறது.
புதிய நிறுவனங்கள்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சாதனை கள் செய்ததற்கு புதிய நிறுவனங்கள் பெரும் காரணமாக இருந்திருக்கின்றன. 2022-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மட்டும் புதிதாக 22 ஆயிரம் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்து 500 நிறுவனங்கள் புதிதாக உருவாகியுள்ளன. அதோடு, பெருந்தொற்று காரணமாக தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருந்த பல நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் துவங்கின. புதிய நிறுவனங்கள் மட்டும் 2 லட்சத்து 26 ஆயிரம் வியட்நாம் டாங் மதிப்பிலான முத லீடுகளைக் கொண்டு வந்துள்ளன. இந்தப் புதிய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். புதிய நிறுவனங்களில் சுற்றுலாத்துறை நிறுவனங்களும் உள்ளன. பெருந்தொற்றால் முடங்கிப் போயிருந்த வியட்நாம் சுற்றுலாத்துறை மீண்டும் சுறு சுறுப்பாகியிருக்கிறது. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 80 ஆயிரம் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஹனோயில் வந்து இறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.