world

தைவானுக்கு ஆயுதங்கள் பதற்றத்தைத் தூண்டும் அமெரிக்கா

வாஷிங்டன், செப்.5- சீனாவின் ஒரு பகுதியான தைவானுக்கு 110 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயு தங்களை வழங்குவதற்கான திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்கா வின் அரசியல் புள்ளிகள் “ஒரே சீனம்” என்ற சர்வதேச அளவிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையை மீறி, தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தனது  இறையாண்மையை நிலைநாட்டும் வகை யிலும் சில ராணுவப் பயிற்சிகளில் சீனா ஈடுபட் டது. இதைக் காரணம் காட்டி, தனது ஆயுத வியா பாரத்தில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.  உக்ரைனைத் தூண்டிவிட்டு, ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடங்கிய பிறகு, உக்ரை னுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் லட்சக்கணக்கான கோடி மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது.

தற்போது சீனப் பகுதியில் பதற்றத்தை உருவாக்கி, தைவான் தலையில் ஆயுதங்களைக் கட்ட முனைந்துள் ள்ளது. பதற்றத்தை அதிகரிக்கும் இந்த செயலால், மேலும் பல நாடுகள் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் ஏற்பாட்டிற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்காவின் இந்தத் திட்டம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்தால் இந்தத் திட்டத்தை நிராகரித்து விட முடியும்.  ஆனால், இரண்டு பெரிய கட்சிகளுமே போட்டி, போட்டுக் கொண்டு சீன எதிர்ப்பு  நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதனால், இந்தத் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைப்பதில் சிரமம் இருக்காது. இந்த ஆயுத வியாபா ரத்தை நிறுத்துங்கள் என்று சீனா அமெரிக்கா வை வலியுறுத்தியுள்ளது.