பிரான்ஸ் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கிடை யில் ஆறு ஒத்துழைப்பு உடன்பாடுகள் கையெழுத் தாகியுள்ளன. இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் அம்சங்களும் அதில் இடம் பிடித்திருக்கின்றன. சுகாதார நலன் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். அமெரிக்காவின் மிரட்டலை மீறி இந்த உடன்பாடுகள் மேற்கொள்வது கியூபாவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் தவித்து வந்த தெற்கு சூடான் நாட்டுக்கு 400 டன் அரிசியை நன்கொடையாக மக்கள் சீனம் வழங்கியுள்ளது. கூடுதலாக வெள்ளப் பாதிப்பும் சேர்ந்து கொண்டது. உலகின் இளமையான நாடு என்று அழைக்கப்படும் தெற்கு சூடானுக்கு தனது ஆதரவை சீனா தொடர்ந்து வழங்கி வருகிறது. 1 கோடியே 18 லட்சம் பேர் உணவு நெருக்கடியில் சிக்கியிருக்கிறார்கள் என்று அந்நாட்டின் மறுவாழ்வு ஆணையத்தின் தலைவர் மனசே லோமோல் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் குறைவான பொருளாதார வளர்ச்சியை ஜெர்மனி அடையும் என்று உலகப் பொருளாதார ஆய்வு செய்யும் கீல் மையம் கணித்துள் ளது. 5.1 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 விழுக்காடு அளவில் தான் வளர்ச்சி இருக்கும் என்று கீல் மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. 2023ல் பொருளாதார வளர்ச்சி 3.3 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.