world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாக். பெண் பத்திரிகையாளர்  மீது கொடூரத் தாக்குதல்

பாகிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியதற்காக பள்ளி உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மெட்ரிக்குலேசன் பள்ளி தேர்வுகள் நடந்து வருகின்றன. அத்தேர் வுக்கான வசதிகள்  எதுவும் முறையாகச் செய்யப் படவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது டன் முறைகேடுகளுக்கும் வழிவகுத்துள்ளது. இதனை பதிவு செய்த பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தைவான் ஜனாதிபதியானார்  லாய் ச்சிங் டே

தைவான் நாட்டின் புதிய ஜனாதி பதியாக லாய் ச்சிங் டே பதவி ஏற்றுள்ளார். தைவான் நாட்டிற்கான புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2024 ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்த லில் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் லாய் ச்சிங் டே வெற்றி பெற்று ஐந்தாவது ஜனாதி பதியாக பதவியேற்றுள்ளார். இவர் ஏற்கனவே இரு முறை மேயராகவும் நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நைஜரில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படை 

ஆப்பிரிக்கா நாடான நைஜரில் இருந்து மீதமுள்ள அமெரிக்கப் படைகள் வெளி யேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெ ரிக்க மற்றும் நைஜர் நாடுகளின் கூட்டறிக்கை யின்படி நைஜரில்  இயங்கி வந்த அமெரிக்க ராணுவத்தின் மீதமுள்ள அனைத்து வீரர்களும் செப்டம்பர் மாதம்   நாட்டை விட்டு வெளியேறு வார்கள் என தெரியவந்துள்ளது. நைஜரில் ராணுவ ஆட்சி அமைந்த பிறகு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிராக உறுதியான நிலைபாட்டை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹைட்டி வன்முறை பாதிப்புக்கு உதவ ஐநா அழைப்பு 

ஹைட்டியில்  நடந்து வரும்   வன்முறையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் உதவி செய்ய வேண்டும் என அந்நாட்டிற்கான ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பா ளர் அழைப்பு விடுத்துள்ளார். ஹைட்டி கும்பல் வன் முறையில் ஒவ்வொரு நாளும் பள்ளிக்குழந்தைக ளும் எளிய மக்களும் தாக்குதலுக்குள்ளாகி வருகி றார்கள். பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சூறை யாடப்பட்டு அழிக்கப்படுகின்றன. சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மக்கள்  இடம்பெயர்ந்துள்ளனர்.இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்மற்றும் குழந்தைகள்.

பிரேசில் வெள்ளம்:   82 ஆயிரம் மக்கள் மீட்பு

பிரேசிலில் ஏப்ரல் 29 முதல் புயல் மற்றும் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக் கை 154 ஆக உயர்ந்துள்ளது. இதை அந்நாட்டு  சிவில் பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.மேலும் 461 நகராட்சிகளில் கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்  அதே நேரத்தில் மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம் மக்கள்  தங்குமிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ள னர் என்றும் 19 நாட்கள் நடைபெற்ற மீட்புப்பணி யில் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் 12 ஆயி ரத்து 100 விலங்குகளும் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

;