world

img

மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் மோனோமெரோஸ் அமெரிக்காவின் சதி தவிடுபொடி

காரகஸ், அக்.11 கொலம்பிய மண்ணில் இருந்து  இயங்கும் வெனிசுலா நிறுவன மான மோனோமெரோஸ் மீண்டும்  வெனிசுலா அரசின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் போன்றவற்றைத் தயார் செய்யும் வேளாண் வேதிப்பொருள் நிறு வனமாக வெனிசுலாவின் மோனோ மெரோஸ் நிறுவனம் இயங்கி வந்தது. வெனிசுலா அரசின் நிறுவனமான இந்த மோனோமெரோஸ் நல்ல லாபத்தைத் தந்த நிறுவனமாகும். வெளிநாடுகளில் இருக்கும் வெனி சுலா அரசின் சொத்துக்களில் இரண்டாவது அதிகமான மதிப்பைக் கொண்டது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வெனிசுலா அரசின் பேகுயிவென் என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இந்த மோனோமெரோஸ் நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. அரசுக்கு  எதிராக எதிர்க்கட்சிகள் அமெரிக்க  ஆதரவுடன் பல்வேறு சதிவேலை களைச் செய்தன. இந்த சதிவேலை கள் முறியடிக்கப்பட்டன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டாவை இடைக்கால ஜனாதி பதியாக அமெரிக்கா மற்றும் அதன் சில கூட்டாளிகள் அங்கீகரித்தனர். 

கொலம்பியாவில் வலதுசாரி மற்றும் அமெரிக்க ஆதரவு அரசு அப்போது இருந்ததால், இந்த வேளாண் வேதிப்பொருட்களைத் தயாரிக்கும் மோனோமெரோஸ் நிறு வனம் எதிர்க்கட்சிகளின் வசம்சென் றது. மே 2019 முதல் தற்போது வரை யில் ஏராளமான நிதி முறைகேடு களும் நடந்துள்ளன. இந்த நிறு வனத்தை அரசிடம் ஒப்படைக்க எதிர்க்கட்சிகள் மறுத்து வந்தன. அமெரிக்காவின் ஆதரவில் கொலம்பிய அரசையும் நிர்ப்பந்தி த்து, நிறுவனத்தை சூறையாடி வந்தனர். ஆனால் கொலம்பியாவில் இடது சாரிக் கொள்கைகளை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற குஸ்தவோ பெட்ரோ பொறுப்பேற்றார். கொலம்பிய மண்ணில் இயங்கி வந்த மோனோ மெரோஸ் நிறுவனத்தை மீண்டும் வெனிசுலா அரசின் பேகுயிவென் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர  பெட்ரோ முடிவு செய்தார். அமெரிக்கா வின் தடைகளை மீறி, தற்போது இந்த நிறுவனம் மீண்டும் வெனி சுலா அரசிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. 

பெருமைக்குரிய நிறுவனம்

பேகுயிவென் நிறுவனத்தின் தலைவரான பெட்ரோ ரபேல் டெல்லிசியா ருயிஸ் கொலம்பியா சென்று மோனோமெரோஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாங்கள் உல கிற்கு சொல்லப் போகிறோம். பெரு மையுடையவர்களாக உணர்கிறோம். மோனோமெரோஸ் போன்ற நிறுவனத்தைப் பெற்ற நாங்கள்  அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லப் போகிறோம்” என்றார்.  கொலம்பியாவின் உரத் தேவை யில் பாதியை இந்த நிறுவனத்தின் ஆலைகள் தயார் செய்து தந்தன. வேளாண் வேதிப்பொருட்களின் தேவையில் 70 விழுக்காட்டை மோனோமெரோஸ் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நிறுவனத்தின் வருமானம் வெனிசுலாவின் எதிர்க்கட்சிகளால் கொள்ளையடிக்கப்பட்டது. “நிறு வனத்தை முழுமையாக மீட்கும் பணி யில் நாங்கள் இருக்கிறோம். புதிய  இயக்குநர்களின் கூட்டமும் நட ந்துள்ளது”  என்று பொருளாதார விவ காரங்களுக்கான துணைத்தலைவர் எல் அய்சாமி தெரிவித்துள்ளார்.  இந்தப் புதிய நிகழ்வுகள் பற்றி அமெரிக்க அரசு இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் வெளியுற வுத்துறை வட்டாரங்கள் அதிர்ச்சி யடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.