world

img

மகுடத்தை நோக்கி நார்வே வீரர் கார்ல்சென்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாய் நாட்டில் நடைபெற்று  வருகிறது. இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் கார்ல்சன் (நார்வே) - இயன் நிபோம்நிஷி (ரஷ்யா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.  மொத்தம் 14 சுற்றுகளை கொண்ட இறுதி சுற்றில் இதுவரை நடைபெற்றுள்ள 8 சுற்று நிறைவு பெற்றுள்ளன. இதில் கார்ல்சன்  5 புள்ளிகளும், நிபோம்நிஷி 3 புள்ளிகளும் எடுத்துள்ளார்கள். கார்ல்சன் 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் இருப்ப தால் உலக சாம்பியனாக கார்ல்சன் மீண்டும் மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாயன்று 9-வது சுற்று ஆட்டம் நடை பெறுகிறது. 

7 மணிநேர போராட்டம்

6-வது சுற்று ஆட்டத்தில் 136 நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக நகர்த்தல் கொண்ட ஆட்டம் இதுதான். 7 மணி நேரம் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
 

;