world

img

பெரும் அசமத்துவம் நிலவும் நாடுகளில் மெக்சிகோ

 மெக்சிகோ சிட்டி, டிச.11- உலக நாடுகளில் உள்ள அசமத்துவ நிலை பற்றிய ஆய்வில், பெரிய அளவில் அசமத்துவம் நிலவும் நாடாக மெக்சிகோ இருப்பது தெரிய வந்துள்ளது. உலகின் பல்வேறு நாடு களில் அசமத்துவ நிலை ஏற்க னவே இருந்து வரக்கூடிய அம்சமாகும். இதில் கோவிட் 19 ஏற்படுத்திய பாதிப்பு அதை அதிகப்படுத்திவிட்டது. கொரோனா தொற்றுக் கால மாக இருந்தாலும், பணக் காரர்கள் தங்கள் செல்வத் தைப் பெருக்குவதில் தடை களைச் சந்திக்கவில்லை. நடுத்தர மற்றும் ஏழைகள் தான் இருப்பதையும் இழந்தி ருக்கிறார்கள். இந்த நிலைமை பல்வேறு ஆய்வுக ளில் தொடர்ந்து அம்பல மாகி வருகிறது. உலக அசமத்துவ அறிக் கையின் படி, மெக்சிகோவின் ஒரு விழுக்காடு பெரும் பணக்காரர்கள் 47 விழுக் காடு குடும்பங்களின் செல்வ மதிப்பைக் கொண்டிருக்கி றார்கள். கீழ் மட்டத்தில் இருக்கும் 50 விழுக்காடு மக் களை விட, மேல் மட்டத்தில் இருக்கும் 10 விழுக்காட்டினர் 30 மடங்கு அதிகமான வரு மானத்தை ஈட்டுகிறார்கள். ஐரோப்பிய, ஆசிய மற்றும் பிற வட அமெரிக்க நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில் அசமத்துவ நிலை குறை வைச் சந்தித்தது. அது போன்று சாதகமான விளை வுகளை மெக்சிகோ சந்திக்க வில்லை.

கடந்த நூற்றாண்டு களிலும், தற்போதும் வருமான அசமத்துவ நிலை மெக்சிகோவில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. கீழ்மட்ட தொழிலா ளர்களில் பாலின ரீதியான அசமத்துவமும் இருக்கிறது. தொழிலாளர்களின் மொத்த வருமானத்தில் மெக்சி கோவில் உள்ள பெண்கள் 33 விழுக்காட்டை மட்டுமே பெறு கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பெண்கள் 39 விழுக் காட்டையும், கனடா, பிரிட்டன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 38 விழுக்காட்டையும் பெறு கிறார்கள். பல ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பெண் தொழிலாளர்கள், மெக்சி கோவில் உள்ள பெண் தொழி லாளர்களை விட குறைவாக விழுக்காட்டைப் பெறுகிறார் கள்.

தற்போது ஜனாதிபதி யாக இருக்கும் லோபஸ் ஓப்ரடார், அசமத்துவ நிலை யைப் போக்கும் வகையில்  பல நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கிறார். நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் எதிர்க் கட்சியினர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இயற்கை வளங்கள் பெரு நிறுவனங்க ளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதை மீட்கும் வகையில் ஓப்ரடார் தலைமையிலான அரசு சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

;