world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொல்வது இனப்படுகொலை இல்லையாம்

ஹமாஸ் உடனான போரில் இஸ்ரேல் ராணுவம்  பாலஸ்தீனர்களை   கொலை செய்வதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் இனப்படு கொலையாக பார்க்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல் களால் இதுவரை 35 ஆயிரம் பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளே ஆவர்.

அகதிகளை கடத்திய குழு தலைவன் கைது

ஐரோப்பாவின்  தேடப்பட்டு வரும் மனித கடத்தல் குற்றவாளியான  பர்ஸான் மஜீத் கைது செய்யப்பட்டுள்ளான்.  தி ஸ்கார்பியன் என்ற புனைபெயருடன் பல  நாடுகளில் இருந்து அகதிகளாக வெளி யேறிய 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாய் வழியாக பர்ஸான் தனது குழுவுடன் கடத்தியுள்ளான். இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிலையில் இராக்கின் குர்திஸ்தான் பகுதியில்  தற்போது பர்ஸான் கைது செய்யப்பட்டுள்ளான். 

கட்சி தலைவர் பதவி :  ராஜினாமா செய்த ஷேபாஸ் ஷெரீப் 

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்)  கட்சியின்  தலைவர் பதவியில் இருந்து பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்  ராஜினாமா செய்துள்ளார். மேலும் கட்சியில் எழுந்துள்ள உள்கட்சிப் பூசல்களுக்கு இடையே முன்னாள் பிரதமரும் தனது மூத்த சகோதரருமான நவாஸ் ஷெரீப்பை அக்கட்சியின் தலைவராக நியமித்துள் ளார். அரசியல் பதற்றத்தால் 2017 ஆம் ஆண்டு  நவாஸ் ஷெரீப் நியாயமற்ற முறையில் பிரதமர் பதவியில் இருந்தும் கட்சி தலைமையில் இருந் தும் நீக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சீனா செல்கிறார்  ரஷ்யா ஜனாதிபதி

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின்  இந்த வாரம் இரண்டு நாள் பயணமாக  சீனா செல்ல உள்ளார்.இந்த பயணத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார் எனவும் சீன அரசு உறுதிப்படுத்தி யுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியாக தொடர்ந்து 5  ஆவது முறையாக புடின் பதவி ஏற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக புடின் சீனா செல் வது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரசியலில் ரஷ்யாவிற்கு அரசியல் பக்க பலமாக சீனா விளங்குவதோடு அந்நாட்டுடன் சிறந்த பொருளாதார உறவுகளையும் பேணி வருகிறது.

டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை  மேம்படுத்த திட்டமிடும் சிங்கப்பூர்

டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை  மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் அரசு இந்த நிதியாண்டில் 1,550 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யும் என்று  அரசுத் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்  ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட  60 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும்,  பழைய டிஜிட்டல் கட்டமைப்புகளை நவீனமயமாக்கு வதற்கும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.