world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் போட்டி 

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிறகு அந்நாட்டிற்கான புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூன் 28 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டே இவர் போட்டியிட இருந்த நிலையில் ஈரான் அதிகாரிகள் அவர் போட்டியிடுவதை தடுத்தது குறிப்பிடத்தக்கது. 

சூடான் உள்நாட்டு போரில்  பாதிக்கப்படும் குழந்தைகள்

சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரில் குழந்தைகளே அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த உள்நாட்டு போரால் 10 லட்சத்துக்கும் அதிகமான  குழந்தைகள்  பள்ளிக்குச் செல்வதிலிருந்து விலகியுள்ளனர்.  குழந்தைகளிடையே ஊட்டச்சத்தின்மை 15.6 சதவீதம் என்ற மோசமான நிலையை எட்டியுள்ளதை. ஐ.நா குழந்தைகள் நிதியம் அறிக்கை காட்டியுள்ளது. மேலும் உலகளவில் அதிக குழநதைகள் இடம்பெயர்ந்த நாடக சூடான் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  

இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தலைநகர் கொழும்பு உட்பட பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இலங்கையின் களனி ஆறு மற்றும்  தெற்கே உள்ள ஜின் ஆற்றின் நீர்மட்டம் அதிகளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது எனவும் மீட்புப்பணிக்கு  முப்படைகளும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா ராணுவத்தளங்கள் மீது  இஸ்ரேல் தாக்குதல்  

லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கு சொந்தமான ராணுவத்தளம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.  லெபனான் - இஸ்ரேல்  எல்லையில் இருந்து  சுமார் 80 கி.மீ தொலைவில் கிழக்கு லெபனா னில் உள்ள பால்பெக் நகரின் மேற்கே அமைந்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவத்தளம் மீது  மூன்று முறை தாக்குதல் நடத்திப்பட்டது என அவ்வமைப்பினர் தெரிவித்து ள்ளனர். இந்த தாக்குதலில் இருவர் படு காயமடைந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் வேலையின்மை   1 சதவீதம் குறைத்துள்ளது 

பிரேசில் நாட்டின் வேலையின்மை   7.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக குறைவு என   பிரேசில் புவியியல் மற்றும் புள்ளியியல் நிறு வனம் தெரிவித்துள்ளது.  2023ஆம் ஆண்டு  8.5 சதவீதம் இருந்த  வேலைவாய்ப்பின்மை சதவீதம்  2024 ஆம் ஆண்டு 7.5 சதவீத மாக குறைந்துள்ளது. அதாவது கடந்தாண்டு டன் ஒப்பிடும் போது  வேலை யின்மை அளவு சீராக குறைத்துள்ளது தெரிய வருகிறது.