பாரிஸ், செப்.8- எரிபொருட்களின் விலைகள் கடுமையான அதிகரித்து வருவதால் 30 நீச்சல் குளங்களை பிரான்ஸ் அரசு இழுத்து மூடியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள நட வடிக்கையால் பல ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. ரஷ்யாவிட மிருந்து எரிபொருள் வாங்க வேண்டாம் என்ற அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் இந்த நாடுகள் அதை நிறுத்திவிட்டன. பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிபொருட்களைத்தான் நம்பியிருந்தன. அமெரிக்காவின் தடைகளை முன்யோசனையின்றி ஆதரித்ததால் எரிபொருட்கள் போதிய அளவில் கிடைக்க வில்லை. விலைகளும் கடுமையாகஏறிவிட்டன. இதனால் பல்வேறு செயல்பாடுகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. நீச்சல் குளங்களை நிர்வகிக்கும் வெர்ட் மரைன், “உக்ரைன் நெருக்க டிக்கு முன்பாக 1 கோடியே 50 லட்சம் யூரோக்கள் எரிபொருட்களுக்கு செலவாகியது. தற்போது அதற்கான செலவு 10 கோடியாக அதிகரித்து விட்டது. நீச்சல் குளத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானமே அவ்வளவுதான். நீச்சல் குளங்களைப் பராமரிப்பதில் நெருக்கடி நிலவுகிறது” என்று குறிப்பிட்டார். நீச்சல் குளங்களை இழுத்து மூடுவதால் குழந்தைகள் நீச்சல் பயில்வது என்பது சாத்தியமில்லாமல் போய்விடும் என்று பிரான்ஸ் நீச்சல் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள் ளது. நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளப் போகிறவர்கள் பயிற்சி எடுக்க முடியாமல் போய்விடும் என்றும் அவர்கள் தெரி விக்கிறார்கள். நாட்டின் கல்வி மற்றும் விளை யாட்டுத்துறையைக் கணக்கில் கொண்டு இந்த நீச்சல் குளங்களுக்கு அரசு உதவி செய்து மீண்டும் திறக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.