world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஆப்கன் பொருளாதாரத்தை  ஊக்குவிக்க சீனா உதவி

10 நாட்களில் 8 கோடி டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை விற்பனை செய்துள்ளதாக ஆப்கன் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்கனில் மத்திய ஆசிய பெட்ரோல் எரிவாயு நிறுவனத்தை (CAPEIC) சீனா நிறுவியது.  இதன் மூலம் ஒரு நாளைக்கு 8,000 பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும்  ஆப்கன் அரசு உற்பத்தியை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

போதைப் பொருட்கள்  தீ வைத்து அழிப்பு 

கம்போடியாவில் கைப்பற்றப்பட்ட பல நூறு கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் மற்றும்  இரசாயனங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய அந்நாட்டு  அதிகாரிகள் 2 கோடியே 27 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 4.1 டன் போதைப் பொருட்கள் எரிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர். 80 கிராமுக்கு மேல் போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிக ளுக்கு அந்நாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மலாவி துணை ஜனாதிபதி மரணம்  ஐ.நா விசாரிக்க கோரிக்கை 

மலாவி துணை ஜனாதிபதி மரணம் குறித்து  ஐ.நா சபை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  மலாவி  துணை ஜனாதிபதி சௌலோஸ் சிலிமா  உள்ளிட்ட 9 பேர் விமான விபத்தில் பலியானது குறித்து நியாயமான விசாரணை வேண்டி, ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்ட ரெஸ் அவர்களுக்கு மலாவிய ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா கூட்டணியில் உள்ள ஜனநாய கத்திற்கான கூட்டணி கட்சியின் தலைவர் ஏனோச் சிஹானா கடிதம் எழுதியுள்ளார்.

காலநிலை மாற்றத்தால்  பிரேசிலில் உற்பத்தி வீழ்ச்சி

பிரேசிலின் அறுவடை 2023 ஆம் ஆண்டை விட 5.9 சதவீதம் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் புவி யியல் மற்றும் புள்ளியியல்  நிறுவன அறிக்கை யில் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும்  எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மொத்த மாக 29.68 கோடி  டன்களாக மட்டுமே  இருக்கும்  என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 0.6-சதவீதம் அதிக நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளது. எனினும் காலநிலை மாற்ற பாதிப்புகளால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

12 ஆண்டாக அதிகரித்து வரும்  கட்டாய இடப்பெயர்வு 

2024 மே மாதம் வலுக்கட்டாயமாக   இடப்பெயர்வு செய்ய வைக்கப்பட்ட மக்க ளின்  எண்ணிக்கை 12 கோடியாக  அதிகரித் துள்ளது என அகதிகளுக்கான ஐ.நா ஆணை யர்  தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து 12 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. உலகளவில் அதிகபட்சமாக சிரியாவில் 1.38 கோடி மக்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியே யும் பலவந்தமாக இடம்பெயர வைக்கப் பட்டுள்ளனர்.