world

ஆப்கன் குறித்து ஜி-20 கூட்டத்தில் முடிவு

ரோம், அக்.13-  ஜி-20 நாடுகள் கூட்டத்தை  இத்தாலி டிஜிட்டல் முறை யில் நடத்தியது. ஆப்கானிஸ்தான் விவ காரத்தில் ஐக்கிய நாடுகள் சபை மிக முக்கிய பங்கா ற்றும். எனவே அந்நாட்டில் ஐக்கிய நாடுகள் சபை தொட ர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆப்கனில் ஐக்கிய நாடுகள் சபை பணியாளர்கள் மற்றும் மனிதநேய பணி யாளர்களுக்கு முழுமை யான, பாதுகாப்பான, தங்கு தடையற்ற உரிமைகள் பாலின வேறுபாடின்றி   வழங்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது. மேலும் ஆப்கன் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில்  அகதிகளாக செல்லாமல் இருக்கவும், மனிதாபிமான பேரழிவைத் தடுக்கவும், மனிதநேய செயல்பாட்டாளர்களின் சேவை அங்கு கட்டாயம் தேவை என்கிற நிலை உரு வாகியுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்ட த்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நாட்டின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய திட்டமான கதி சக்தி திட்டத்தை பிரதமர் மோடி  அறிமுகப்படுத்தினார். நாட்டின் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு  கதி சக்தி திட்டம் மூலம் அடித்தள மிடப்பட்டுள்ளது என்று  பிரதமர் கூறினார்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த  மேலும் 4 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் மனு அளித்துள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணை ப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.