world

அதிமுக அரசு மீதான முன்னாள் ஆளுநரின் பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு மீது உரிய விசாரணை நடத்துக!

அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, அக்.22-  ரூ.50 கோடி என பணம் பெற்றுக் கொண்டு  பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் அளிக்கப்பட்டதாக அதிமுக அரசு மீது முன் னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பகி ரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்  ளார். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசா ரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநராக இருந்த,  இன்றைய பஞ்சாப் ஆளுநராக உள்ள  பன்வாரிலால் புரோஹித் அப்போதைய அதி முக அரசு மீது பகிரங்கமானதொரு ஊழல்  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ கத்தில் நான்கு ஆண்டுகள் ஆளுநராக பணி யாற்றிய காலத்தில் தனக்கிருந்த அனுபவம் மிகமிக மோசமானதாக இருந்ததாகவும், கல்வித் துறையில் பெருமளவிலான ஊழல் தலைவிரித்து ஆடியதாகவும் தெரிவித்த தோடு, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழ கங்களின் துணைவேந்தர் நியமனங்களில் பெருமளவிலான முறைகேடுகள் நடைபெற்ற தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ.40 கோடி ரூ. 50 கோடி என பணம் பெற்றுக் கொண்டு பல்க லைக்கழக துணைவேந்தர் பதவிகள் அளிக்கப்பட்டதாகவும், அவர் பதவியில் இருந்த காலத்தில் 27 பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்ட தாகவும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.  அவரது குற்றச்சாட்டை வைத்துப் பார்க்கும் போது, பல்கலைக்கழக துணைவேந்தர் நிய மனங்களில் மட்டும் சுமார் ஆயிரத்து ஐநூறு  கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றி ருக்கலாம் என்பதோடு, துணைவேந்தர் நிய மனங்கள் மட்டுமல்லாது ஆசிரியர் நிய மனங்களிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் அள வில் ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்புள்ள தாகவே தெரிகிறது.

கல்வித்துறையில் இத்த கைய இமாலய ஊழல் நடைபெற்றிருக்கிறது எனில் அதைப் போலவே அனைத்துத் துறை களிலும் மிகப் பெரும் ஊழல்களும், முறைகேடு களும் கூட நடைபெற்றிருக்கும் என கருத வேண்டியுள்ளது.    தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஒருவரே இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும்  நிலையில் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, துணைவேந்தர் நியமனங்களில் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு கள் குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முறை கேடுகள் நடைபெற்றிருப்பதை தற்போது பகி ரங்கமாக தெரிவித்துள்ள பன்வாரிலால் புரோ ஹித் ஆளுநராக இருந்தபோது அதை ஏன்  தடுக்காமல் அமைதி காத்தார் எனும் கேள்வி யும் இயல்பாக எழுகிறது. எனவே, ஆளுநரும் முறைகேட்டிற்கு அப்பாற்பட்டவரல்ல என்றே கருத வேண்டி யுள்ளது. அன்றைய அதிமுக அரசில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனை வரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;