world

உலகச் செய்திகள்

ஐரோப்பிய-ஆசியப் பொருளாதாரக் கூட்டமைப்பில் பார்வையாளராக இணைந்து ஓராண்டு நிறைவு பெற்றதைக் கியூபா கொண்டாடி உள்ளது. இந்தக் கூட்ட மைப்பில் ரஷ்யா, பெலாரஸ், ஆர்மீனியா, கஜகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. கியூபாவைப் போன்று உஸ்பெகிஸ்தானும் பார்வையாளராக இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காணொளி வாயிலாக நடந்த கூட்டத்தில் கியூபாவின் ஜனாதிபதி மிகேல் டயஸ் கானெல் உரையாற்றினார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கினால் நல்ல உடன்பாட்டை எட்ட முடியும் என்று ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் நடை பெற்ற பேச்சுவார்த்தைகள் பற்றிப் பேசிய அவர், சுயமரி யாதையுடன் அந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங் கேற்றது. மறுபக்கத்தில் உள்ளவர்கள் தடைகளை நீக்கு வதில் உறுதியாக இருந்தால் நல்ல உடன்பாடு ஏற்படும். நாங்கள் அதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்றார்.

தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பிளாஸ்டிக் மாசு வைக் கட்டுப்படுத்த ஒன்று சேர்ந்து நடவடிக்கை களை எடுப்பது என்று டான்சானியா, கென்யா, உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நான்கு கிழக்கு ஆப்பிரிக்க நாடகளும் முடிவெடுத்துள்ளன. ஒரு வேளைப் பயன்பாடு பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துவதில் முதல்கட்டமாக இந்த நாடுகள் கவனம் செலுத்த உள்ளன.