world

img

கண்டிப்பான பெற்றோரின் கவனத்திற்கு!

கண்டிப்பான பெற்றோருடன் வளரும் குழந்தைகளின் உடல் அமைப்பானது டிஎன்ஏவை உணரும் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 
கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள், மற்றும் சுதந்திரமாக வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறியும் வகையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 12 முதல் 16 வயது வரையிலான பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு அணியிலும் சமமான அளவில் ஆண் குழந்தைகளும் இருந்தனர். இந்த ஆய்வின் முடிவை வியன்னாவில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் எவலியன் வான் ஆஷ்சே தாக்கல் செய்தார். அதில் குழந்தை வளர்ப்பின் போது கடுமையாக நடந்து கொள்வது உடல் ரீதியான தண்டனை மற்றும் உளவியல் ரீதியாக துன்புறுத்தல்களால், டிஎன்ஏவில் சற்று கடின கோடாக மாறி ஒரு மரபணு எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதற்கான கூடுதல் விஷயங்களையும் கண்டறிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வளரும் குழந்தையை  மனச் சோர்வு ஆளாக்கும் என்பதற்கான சில குறிப்புகளும் கிடைத்துள்ளன. 
இவ்வாறு மன உளைச்சல் அல்லது மன சோர்வு ஆரப்ப நிலையில் இருந்ததும், சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. 
அதே சமயம் மிகவும் சுதந்திரமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.