world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கனடாவில் காட்டுத் தீ  6,600 குடும்பங்கள் வெளியேற்றம் 

கனடா நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் மேற்கு மாகாண மான ஆல்பர்ட்டா பகுதியில் இருந்து 6,600 குடும்பங்க ளை வெளியேற்றியுள்ளது அந்நாட்டு அரசு. மேலும் பெக்கன் ஹில், அபாசண்ட், ப்ரேரி  க்ரீக், கிரேலிங் டெரஸ் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மக்களையும் வெளியேற உத்தர விட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு கனடாவில்  7,131 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.இந்த காட்டுத்தீயில் 17,203,625 ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது.

நுசிராத் அகதிகள் முகாமில்  40 பாலஸ்தீனர்கள் கொலை 

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் குண்டு வீசி 40 பாலஸ்தீனர்களை கொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். மேலும் மே 14 அன்று இரவு இஸ்ரேல்  ராணுவம் நுசிராத் முகாமை பல முறை தாக்கியுள்ளது. சர்வதேசச் சட்டங்களை மீறி தொடர்ந்து அகதிகள் முகாமில் உள்ள மக்கள் மீதும் வீடுகள் மீதும்   ஏவுகணைத்  தாக்கு தலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால்  35,000 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

உணவு பாதுகாப்பின்மையில்  70 லட்சம் சூடானியர்கள் 

தெற்கு சூடானில் உள்ள  1.1 கோடி  மக்கள்தொகையில் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்  வரும் ஜூலை மாதத்தில் தீவிரமான  உணவுப் பாதுகாப்பின் மையால் பாதிக்கப்படுவார்கள் என்று ஐநா  தெரிவித்துள்ளது. மனிதாபிமான விவகாரங் களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் இரு இனக்குழுக்களுக்கிடை யிலான  வன்முறை, பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் குறைந்த பட்சம் 79,000 பேர் பேரழிவுகரமான பஞ்சத்தில்தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

 

;