வெள்ளி, பிப்ரவரி 26, 2021

world

img

மேலும் 3 மாத காலத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்து கிடையாது...   பிரிட்டன் பிரதமர் உத்தரவு... 

லண்டன் 
ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடான பிரிட்டனில் இன்னும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறையவில்லை. இதுபோக உருமாறிய கொரோனா வேறு தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது அந்நாட்டு அரசு கட்டுப்பாடு, தளர்வுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், வரும் மே மாதம் 17-ஆம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்து தடை தொடரும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஏப்ரல் 12ஆம் தேதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் பிரிட்டனில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் விகிதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். இதுவரை அங்கு 41.26 லட்சம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 25.48 லட்சம் பேர் குணமடைந்தனர்.      

;