world

img

வெளிநாட்டினரை ராணுவத்தில் இணைக்க ஆஸ்திரேலியா முடிவு

வெளிநாட்டினரை ராணுவத்தில் இணைக்க ஆஸ்திரேலியா முடிவு  கான்பெரா, ஜூன் 4- ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு இலக்கை அடைய முடியாமல் திணறி வரும் நிலையில் வெளிநாட்டினரை ராணுவத்தில் இணைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை  அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், 12 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எந்த ஒரு வெளிநாட்டு குடிமகனும் ஆஸ்திரேலியா ராணு வத்தில் சேவை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.  

மேலும் பிரிட்டன், கனடா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த குடிமக்கள் ராணுவத்தில் இணைய வேண்டும் எனவும் விருப்பம் தெரி வித்துள்ளார்.   தீவு நாடாக உள்ள ஆஸ்திரேலியா, அந்நாட்டின் கடல் எல்லைகளை சுற்றி அதிகரிக்கும் பதற்றங்களை எதிர்கொள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள், அதி நவீன போர் விமானங்கள் மற்றும் ராணுவ வாகனங்களை வாங்கி வருகிறது.

இந்நிலையில் அவற்றை பராமரிக்கவும் நாட்டின் ராணுவத்தை பலப்படுத்தவும் போதிய ராணுவவீரர்கள் இன்றி தவிக்கிறது. இந்த பற்றாக்குறையைச்   சமாளிக்க  தற்போது வெளிநாட்டு குடிமக்களை பணியமர்த்த முடி வெடுத்துள்ளது.

;