செவ்வாய், ஜனவரி 19, 2021

world

img

ராணுவத்தளம் மீது பயங்கரவாத தாக்குதல்...   ஆப்கானிஸ்தானில் 34 வீரர்கள் பலி... 

காபூல் 
மத்திய தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கிழக்கு பகுதி மாகாணமான கஸ்னியில் ராணுவத் தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

வீரர்கள் இறப்பு விகிதத்தில் குளறுபடி....  
இந்த தீவிரவாத தாக்குதலில் 34 பேர் பலியானதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தாகவும்,  கஸ்னி மாகாண சுகாதாரத் துறை அதிகாரி ஜாஹிர் ஷா நிக்மல் தகவல் வெளியிட்டுள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் 31 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.  குறிப்பாக இந்த தாக்குதல் விவகாரத்தில் தலிபான் தீவிரவாத அமைப்பு இன்னும் பொறுப்பேற்கவில்லை.  

;