அமெரிக்காவின் கொலோராடோ மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருவதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் எட்டு வீடுகள் எரிந்து போயுள்ளன. 500 வீடுகளைக் காலி செய்து விட்டு மக்கள் வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். ஆயிரம் பேர் பாதுகாப்பான் இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் பாதிக்கப்படுவது அமெரிக்காவில் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. 15 மீட்டர் உயரத்திற்கு காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிவதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெளியிலிருந்து யாரும் வரக்கூடாது என்பதற்காக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.
நகரத்தில் உள்ள விமான நிலையத்தை மூடி விட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைக்கும் படை வீரர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.