திங்கள், செப்டம்பர் 27, 2021

world

img

அமெரிக்காவில் 400 ஏக்கருக்குப் பரவிய காட்டுத்தீ 

வாசிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள காடுகளில் 400 ஏக்கர் பரப்பளவிற்குக் காட்டு தீ பரவி வருகிறது .

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கு பகுதியில் பற்றி எறியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இருந்தும் , தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறுகின்றனர். மேலும் , தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடக்கத்தில் , 5 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதியில் மட்டும் பற்றி எறிந்த தீயானது , சில மணி நேரங்களில் சுமார் 400 ஏக்கர் அளவிற்குப் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

காட்டுத்தீ பற்றி எரியும் பகுதியை ஒட்டியுள்ள சாலைகள்  தற்போது மூடப்பட்டுள்ளது. காட்டுத்தீ எவ்வாறு உருவானது என்பது பற்றித் தெரியாத நிலையில்  வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

 

 

;