world

img

அமெரிக்காவில் மான்களுக்கு ஒமைக்ரான்

அமெரிக்காவில் வாழும் மான்களில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றான அயோவாவில் வாழும் மான்களை வைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதியிலிருந்து ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில்,131 மான்களின் ரத்த மாதிரியை சேகரித்தனர்.

அவற்றை ஆய்வு செய்தபோது, மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்ட 68 மான்களில் 7 மான்களின் மூக்கில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது தெரியவந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மான்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது, வெள்ளை நிற மான்கள் சிலவற்றில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாதிரி எடுக்கப்பட்ட வெள்ளை நிற மான்களில் 80 சதவீத விலங்குகளில் ஒமைக்ரான் இருந்துள்ளது.

இந்த மான்கள் நியூயார்க்கில் ஸ்டேடன் தீவில் வாழ்ந்து வருகின்றன. நியூயார்க்கில் சில மனிதர்களின் மாதிரியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் போன்ற அம்சங்கள் இந்த வெள்ளை நிற மான்களில் இருப்பதால், மனிதர்களிடம் இருந்து அவற்றுக்குப் பரவி இருக்கலாம் என்று தெரிகிறது. சில மான்களில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மனிதர்களை போலவே இந்த மான்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதும் தெரியவந்துள்ளது.