பிரேசிலியா, ஜூலை 10- வலதுசாரி ஜனாதிபதி போல்சானரோவின் ஆட்சிக்காலத்தில் விரைவுபடுத்தப்பட்ட காடுகள் அழிப்பு நடவடிக்கைகளுக்கு வேகத்தடை போடும் இடதுசாரி அரசின் பணி நல்ல பலனைத் தந்துள்ளது. தென் அமெரிக்காவின் பல நாடுகளில் பரவி யிருக்கும் அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. அந்தக் காட்டுப் பகுதிக்குள் இருக்கும் ஏராளமான இயற்கை வளங்கள் மீது பன்னாட்டுப் பெரு நிறுவனங் களின் கண்கள் பதிந்துள்ளன. அந்த வளங்களை சுரண்டும் நோக்கத்தில் தென் அமெரிக்க நாடு களில் வலதுசாரித் தலைவர்களை ஜனாதிபதி களாக ஆக்க அந்த நிறுவனங்கள் உதவின. அவர்களின் முயற்சிகளை மீறி மக்கள் ஆத ரவுடன் இடதுசாரித் தலைவர்கள் வெற்றி பெற்றால் அவர்களின் அரசுகளைக் கவிழ்க்கும் வேலை யில் அந்த பெரு நிறுவனங்கள் ஈடுபட்டன. அதில் வெற்றியும் பெற்றன. அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலில் உள்ளது. அமெரிக்க ஆதரவுடன் ஜனாதிபதி யாக பொறுப்பேற்ற ஜெய்ர் போல்சானரோ, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
பிரேசில் மக்கள் மட்டுமல்ல, அமேசான் காடுகளின் இருப்பு ஒட்டுமொத்த உலகத்திற்கே பலன் தரும் என்பதால் சர்வதேச அளவில் அந்தக் காடுகளை அழிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதையெல் லாம் பொருட்படுத்தாமல் வலதுசாரிகள் இயற்கை வளங்களை வளர்ந்த நாடுகளின் கைகளில் ஒப்படைக்கத் துடித்தனர். அமேசான் பாதுகாப்பு என்பதைத் தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இடதுசாரித் தலைவரான லூலா டி சில்வா மக்களிடம் அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் லூலாவின் முனைப்பு மிகச்சரியாக இருப் பதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் காடுகளை அழிக்கும் பணி 33.6 விழுக்காடு அளவிற்கு குறைக்கப்பட்டிருக்கிறது. முந்தைய நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட அழிப்பையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2 ஆயி ரத்து 500 சதுர மைல் அளவில் காடுகள் அழிக்கப் பட்டன. தற்போது அது வெறும் 1,023 சதுர மைல் களாகக் குறைந்துள்ளன. இத்தகைய அழிப்பை முழுவதுமாக தடுப்பதோடு, காட்டுப்பகுதியை அதிகப்படுத்துவோம் என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் மீண்டும் வறண்ட காலநிலை தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் வனப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாவது வழக்கமான ஒன்றாகும். கால நிலையைப் பயன்படுத்திக் கொண்டு காட்டுப்பகுதிகளில் உள்ள வளங் களைக் குறிவைத்துப் பலரும் இயங்குவார்கள். இருந்தாலும் தங்கள் பணி தடையில்லாது தொட ரும் என்று கூறியுள்ள பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயல் செயலாளர் ஜோவோ பாவ்லோ, “காட்டுப்பகுதிகள் அழிந்து வரும் வேகத்தைக் குறைத்து விட்டோம். தற்போது அழிவு அதிகரிக்கவில்லை. அதேவேளையில் வரும் மாதங்கள் எங்களுக்கு சவாலானதாகவே இருக்கும்” என்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு, நடப்பாண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது அழிவு 41 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இந்தப் புள்ளிவிபரம் லூலா தலைமையிலான அரசுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. சட்டவிரோதமான அழிப்புப் பணியைக் குறைப்பேன் என்று அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை நோக்கி நகர்கிறார்கள் என்பதை இது காட்டு கின்றது. வலதுசாரிகள் ஆட்சியில் இருந்த காலத்தில் காடுகள் அழிப்பு திட்டமிட்ட வகையில் அரசின் ஆதரவோடு செய்யப்பட்டது. அந்த சட்ட விரோத சக்திகள் ஒடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டு இந்தியா அளவு
இந்திய நிலப்பரப்பைப் போன்று இரண்டு மடங்கு பரப்பில் அமேசான் மழைக்காடுகள் அமைந்துள்ளன. இதில் மூன்றில் இரண்டு பகுதி பிரேசிலில் உள்ளது. எனவே, அமேசான் காடு களின் பாதுகாப்பு என்று வருகையில் பிரேசிலின் அணுகுமுறைதான் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்த முடியும். போல்சானரோவின் ஆட்சிக் காலத்தில் அதற்கு முன்பு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காடுகள் அழிப்பு நடந்தன. அரசு எந்திரம் அழிப்புக்குத் துணையாக நின்றது. இடதுசாரி ஜனாதிபதி லூலா பொறுப்பேற்ற பிறகு, அழிப்புக்கு எதிராக அரசு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.