world

img

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில், சோதனையின்போது ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறியது. 
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டை வரும் ஜூன் 29 ஆம் தேதி விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று ராக்கெட்டை சோதனை செய்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக என்ஜின் இயக்கப்பட்டது. அப்போது திடீரென ராக்கெட் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்பாகவும் புகைமூட்டமாகவும் காணப்பட்டது. இதையடுத்து, ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 2 ஸ்டார்ஷிப் சோதனை ராக்கெட்கள் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறின என்பது குறிப்பிடத்தக்கது.