world

புற்றுநோயை உருவாக்காதீர்கள் ஆசிரியர்கள் எச்சரிக்கை

லண்டன், ஜூலை 10- பள்ளிக்கூடங்களில் ஆஸ்பெஸ்டாஸ்(கல்நார்) கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அகற்றுங்கள் என்று பிரிட்டனில் உள்ள ஆசிரியர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. தங்கள் நாட்டில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு பள்ளிகளில் புற்றுநோய் உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டவை வைக்கப்பட்டுள்ளன. 1980 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இத்தகைய பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூட ஊழியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மாணவர்களிலும் சுமார் 9 ஆயிரம் பேர் இவற்றின் பாதிப்புகளால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகைய விளைவுகளைப் பரிசீலியுங்கள் என்று அரசியல் கட்சிகளுக்கு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை வைத்திருக்கிறது. தற்போதைய அரசு ஒவ்வொரு ஆண்டும் 50 புதிய பள்ளிகளைக் கட்ட முடிவெடுத்துள்ளது. இந்த வேகத்தில் சென்றால் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற தீங்கு தரும் பொருட்கள் இல்லாத கட்டிடங்களை உருவாக்க 350 ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆசிரியர்கள் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. 40 ஆண்டுகள் என்ற காலவரம்பு கேலிக்குரியதாகவே இருக்கும் என்கிறார்கள். தற்போதைய வலதுசாரிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, அதாவது தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் அவற்றை சீர்செய்வதற்காக 750 கோடி பவுண்டுகள் ஒதுக்கப்பட்டன.  தற்போது சராசரியாக வெறும் 230 கோடி பவுண்டுகளை மட்டுமே வலதுசாரி ஆட்சி ஒதுக்கி வருகிறது.

;