world

img

உருமாறிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும் .... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை....

ஜெனீவா:
பிரிட்டன், தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை. அதைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் உள்ளன  என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகம் 70 சதவீதம் அதிகமானது, கட்டுப்பாட்டில் இல்லை என்று பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பிரிவின் தலைவர் மருத்துவர் மைக்கேல் ரேயான் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை. உருமாறிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.நாம் இப்போது செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்தால் போதுமானது. ஆனால், இன்னும் சற்று தீவிரத்தன்மையுடனும், நீண்டகாலத்துக்கும் செய்வது வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கும். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், சில நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள், கடினமான கட்டுப்பாடுகள் தேவை. அப்போதுதான் உருமாறிய கொரோனா வைரஸ் சற்று வீரியத்தன்மை உள்ளதாக இருந்தாலும் அதை நம்மால் தடுத்துநிறுத்த முடியும் என்று தெரிவித்தார்.

;